A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, June 8, 2012

அவ அழகு


முக்கால் விழிமூடி

முழுதாக இதழ்குவித்து

தாயின் மார்புதனைதேடிய

மழலைஎன் பரிசம்அழகு



தொப்புள்கொடி அறுத்தும்

தொலைவாய் பிரிந்தும்

உள்ஒளியாகி உயிரன்பினைத் தந்த

அன்னையின் நினைவுகள் ஆகா அழகு



கைவிரல் மடக்கி

கனிவினை பொழிந்து

முதலெழுத் தறிவித்த

நேசறிரீச்சர் ஐயகோ நல்லழகு



மணல் எல்லாம் வீடுகட்டி

தெருவெல்லாம் தாவடிச்சு

நிழல்போல இணைவாளே

என்பள்ளித் தோழியவ அழகு



பதின்ம வயதினில்

பாவாடை கோலத்திலே

அவ படுத்திவிட்ட பாடிருக்கே

அந்த இம்சையே தனியழகு



விழிக்குள் விழிமூடி

இதயத்தில் சுழியோடி

காதலெனும் முத்தெடுத்த

கன்னிப்பொண்ணு அவதேரழகு



உள்ளத்தை உவந்தளித்து

உணர்வுகளால் குளிர்ப்பாட்டி

மணவறையில் மனசிணைத்த

மகராசி அவ பூவழகு



தொடராக இடர்வரினும்

இடராத மனசோடு

துணையாக வருகின்ற

இணையாள் அவ பேரழகு





பாரதியின் கவியழகு

மாக்ஸின் பொருளழகு

வள்ளுவனின் நெறியழகு

காந்தியின் வாழ்வழகு



இசையழகு இயற்கையழகு

இலக்கியமழகு இல்லறமுமழகு

இப்படி எத்தனை அழகு ஆனாலும்

சீசீ அவசரமாய் இதுஎன்ன உலகு?



நன்றி.

நட்புடன்,

அ.பகீரதன்

No comments:

Post a Comment